சென்னை: அம்பத்தூர், மாதனாங்குப்பம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டுமான பணி செய்ய பணியாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த சில இளைஞர்கள் கட்டுமான பணி நடைபெற்று வரும் கட்டிடத்தினுள் புகுந்து அங்கிருந்த பணியாளர்களை தாக்கி அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
மேலும் பணம், செல்போன்களை இழந்த அந்த பணியாளர்கள் வழிப்பறி செய்த இளைஞர்களை கட்டைகளை எடுத்துக் கொண்டு துரத்த அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் புதிதாக பூங்கா, விளையாட்டுத் திடல் அமைக்க மாநகராட்சித் திட்டம்!