சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (40), கட்டடத் தொழிலாளி. இவர், வீடு கட்டிக் கொடுத்த பணம் ரூ. 6 லட்சத்தை காவலர் கொடுக்காமல் ஏமாற்றுவதாக காவல் ஆணையரிடம் இன்று (ஆக.5) புகார் அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், "கடந்த 2018 ஆம் ஆண்டு நண்பர் மூலமாக காவலர் சிவக்குமார் அறிமுகமானார். கூடுவாஞ்சேரியில் தனக்கு சொந்தமாக இடம் இருப்பதாக கூறி அங்கு வீடு கட்டித் தர வேண்டும் என என்னிடம் கேட்டார்.
அதிமுக பிரமுகர் மிரட்டல்
அதன்படி வீட்டின் முதல் தளத்தை கட்டி முடித்தவுடன் பணம் தருவதாக அவர் கூறினார். இதனை நம்பி நான் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்தேன். தற்போது வீடு கட்டிக்கொடுத்த பணம் ரூ. 6 லட்சத்தை கேட்டதற்கு காவலர் சிவகுமார் அதிமுக பிரமுகருடன் சேர்ந்து மிரட்டுகிறார்" எனக் கூறினார்.
இது தொடர்பாக காவலர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!