சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி வேளச்சேரி - பரங்கிமலை இடையே உள்ள 5 கி.மீ. துாரத்தை இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தன. பின்னர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணபட்டு, கடந்த ஆண்டு முதல், 167 தூண்கள் கொண்ட ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Witness an Engineering Marvel in Progress!
— Southern Railway (@GMSRailway) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Velachery-Mount MRTS Phase-II Project
3 more steel girders of Rail Over Rail bridge at St Thomas Mount as part of MRTS Ph-II project has been launched
With this all the 6/6 girders have been placed on the Structure#SouthernRailway pic.twitter.com/ctV5TEcBgV
">Witness an Engineering Marvel in Progress!
— Southern Railway (@GMSRailway) November 2, 2023
Velachery-Mount MRTS Phase-II Project
3 more steel girders of Rail Over Rail bridge at St Thomas Mount as part of MRTS Ph-II project has been launched
With this all the 6/6 girders have been placed on the Structure#SouthernRailway pic.twitter.com/ctV5TEcBgVWitness an Engineering Marvel in Progress!
— Southern Railway (@GMSRailway) November 2, 2023
Velachery-Mount MRTS Phase-II Project
3 more steel girders of Rail Over Rail bridge at St Thomas Mount as part of MRTS Ph-II project has been launched
With this all the 6/6 girders have been placed on the Structure#SouthernRailway pic.twitter.com/ctV5TEcBgV
நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, இந்த தடத்தில் கடந்த ஆண்டு முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி மேம்பால பாதையை இணைக்கும் வகையில், அங்குள்ள ரயில் பாதைக்கு மேல், இரும்பு தூண்கள் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கி முழு வீச்சில் வேலைகள நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ”இந்த மேம்பால ரயில் பாதை திட்டம் ரூ.734 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்க ஆறு இரும்பு தூண்கள் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. எஞ்சியுள்ள பணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் முடியும்” என்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 3 லட்சம்;10 மாதங்களில் 7 கோடி.. சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!