ETV Bharat / state

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி முருகன் உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 12, 2022, 9:11 PM IST

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்கள் என கூறப்படும் நளினி முருகன் உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ராஜீவ் காந்தி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வலியுருத்தி சென்னை சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலையில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கான அமைப்பின் சார்பில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்த முன்னாள் காவல் துறை அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருமான அனுசியா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜோதி ராமலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு பிரிவின் தலைவர் பெரம்பூர் நிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கியதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசியா, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், பின்னர் யாருக்கு மரண தண்டனை கொடுப்பார்கள்?

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அனைத்து குற்றவாளிகளுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவார்களா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு இருக்கும் குற்றவாளிகளுக்கு மட்டும் ஏன் சிறப்பு தீர்மானம். பல்வேறு கொலை குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தற்போது விடுதலை வழங்கி இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜீவ் காந்தி, முன்னாள் பிரதமராக இருந்தார் என்ற காரணத்திற்காக தற்போது ஆளும் பாஜக அரசு இந்த வழக்கில் மறுப்பு தெரிவிக்காமல் மேல்முறையீடு செய்யாமல் மௌனம் காத்திருப்பது கண்டனத்திற்குரியது. உடனடியாக நாடாளுமன்ற குழுவை கூட்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யாமல் இருக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் ஓபிஎஸ், ஈபிஎஸ்... பிரதமர் மோடி முயற்சி.?0.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.