ETV Bharat / state

’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம்' - காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு - தங்கபாலு

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் நடக்கும் ஆட்சி சிறப்பாக இல்லை என்பதற்கு நான்கு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆனது ஒரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம்..!’ - கே.வி.தங்கபாலு

author img

By

Published : Jul 26, 2022, 8:45 PM IST

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவி சோனியா காந்தி அமலாக்க துறையில் 2-வது முறையாக இன்று (ஜூலை 26) ஆஜராகினார். இதனால் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருநாவுக்கரசர், கேவி தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ன மூர்த்தி, முருகானந்தம், சொர்ணம் சேதுராமன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா, மாநில செயலாளர்கள் கடல் தமிழ்வாணன், சேப்பாக்கம் அன்பழகன், சர்கிள் தலைவர் தனிகாசலம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, “சோனியா காந்தி இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதிலும் அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி அவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூலம் எந்த வருமானமும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம். காங்கிரஸ் கட்சியை பழிவாங்க வேண்டும் என்று காழ்ப்புணர்ச்சியோடு இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மத்திய அரசுக்கு சரியான பதிலடி கொடுக்கும் என நினைக்கிறேன். இந்த நாட்டில் நீதி இன்னும் பணிந்து விடவில்லை என நீதியின் பக்கம் நாங்கள் நிற்கிறோம். இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமை ஆட்சிக்கு வரும்போது நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம். சத்தியம் வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம், அதனால் தான் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் குற்றமற்றவர்கள் என்று இந்த நாடு காணும். பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவில் நடக்கும் ஆட்சி சிறப்பாக இல்லை என்பதற்கு இந்த நான்கு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆனது ஒரு எடுத்துக்காட்டு.

நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்த மக்களவை உறுப்பினர்களை சபாநாயகர் கூட்டத்தொடரில் பங்கேற்க கூடாது என்று தெரிவித்துள்ளார். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க வேண்டிய அரசு அதை தவறிவிட்டது என்பதை காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.