சென்னை: இரண்டு நாள் சுற்று பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் பிற்பகலில் சென்னை வருகைத் தந்தார். பிரதமரின் வருகையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை வருகையின் போது ரூ.1,260 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை இன்று முதல் தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்திலும் மாலை பிரதமர் கலந்துக் கொள்கிறார்.
இதனிடையே ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து பல்வேறு இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை அறிவித்தனர்.
பரபரப்பான சூழ்நிலையில் சென்னைக்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு துண்டு அணிதும், #Gobackmodi என்று அச்சடிக்கப்பட்ட பலூன் கொண்டு பரக்கவிடுவதும் கருப்பு கொடியுடன் உடலில் சட்டை இல்லாமால் கருப்பு மை பூசி அதில் gobackmodi என்று வாசகம் எழுதி தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தொண்டரின் உடலில் சட்டை இல்லாமால் கருப்பு மை பூசி அதில் gobackmodi என்று வாசகம் எழுதியது பெரும் கவணத்தைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் இந்தியா முழுவதும் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக சாலையில் கறுப்பு பலூன்களுடன் நின்றிருந்தவர்களிடம் இருந்து பலூன்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
#Vanakkam_Modi
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let the world know that honorable PM is the most beloved leader of Tamil! pic.twitter.com/9wMvnVI0rf
">#Vanakkam_Modi
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 8, 2023
Let the world know that honorable PM is the most beloved leader of Tamil! pic.twitter.com/9wMvnVI0rf#Vanakkam_Modi
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 8, 2023
Let the world know that honorable PM is the most beloved leader of Tamil! pic.twitter.com/9wMvnVI0rf
இது ஒருபுறம் இருக்க பாஜக தொண்டர்கள், காங்கிரஸ் கட்சியினரின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பிரதமரின் வருகையை போற்றும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் #vanakkam modi #welcomemodi என மருபுறம் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ட்விட்டரில் இருகட்சியின் மோதல்கள் நெட்டிசன்கள் மற்றும் சாமனிய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?