ETV Bharat / state

’முருகன் அல்ல, பிள்ளையாரை வைத்தாலும் பாஜக தமிழ்நாட்டில் வாக்குகளைப் பெற முடியாது’ - செல்வப்பெருந்தகை - அண்மை செய்திகள்

முருகனை வைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை தமிழ்நாட்டில் பெற்றுவிடலாம் என பாஜக தப்புக் கணக்கு போடுகிறது என்றும், பிள்ளையாரை வைத்து பரப்புரை செய்தாலும் அது தமிழ்நாட்டில் நடக்காது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
author img

By

Published : Jul 8, 2021, 4:48 PM IST

Updated : Jul 8, 2021, 4:54 PM IST

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு போராட்டங்கள் இன்று (ஜூலை.08) நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தென் சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, மாநிலச் செயலாளர் இலா பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம், மாநிலச் செயலர் செரிப், மாவட்ட பொதுச் செயலர் ராஜராஜேஸ்வரி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி உமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னதாக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை காமாராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சைக்கிள் பேரணியில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். நெசப்பாக்கம், கே.கே.நகர், உதயம் திரையரங்கம், அசோக் பில்லர், வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர் வழியாக வந்து இறுதியாக சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ராஜிவ்காந்தி சிலை முன்பு இந்தப் பேரனி நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டனப் போராட்டங்கள், பேரணிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

மோடி அரசு உடனடியாக இந்த விலைவாசி உயர்வை திரும்பப் பெற வேண்டும். இந்த அரசு அம்பானி, அதானி ஆகிய இருவருக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது. நீண்டகாலம் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கிளர்ச்சி ஏற்பட்டு இந்த ஆட்சி அகற்றப்படும். மேலும் அதிமுக பாஜக கூட்டணி இயற்கையானது அல்ல, அது ஒரு செயற்கை கூட்டணி, அது நிலைப்பதற்கு வாய்ப்பில்லை.

முருகனை வைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. பிள்ளையாரை வைத்தாலும் அது தமிழ்நாட்டில் நடக்காது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்துக்கு கொடி காத்த குமரன் பெயர் சூட்டுக: உறவினர்கள் வலியுறுத்தல்

Last Updated : Jul 8, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.