சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், 'நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்வது பெரும்பாலும் வழக்கத்தில் கிடையாது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். எதிர்ப்புகளை ஆக்ரோசமாக சொல்லலாம் என்பது தான் இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பாகும். ஆனால், எதிர்க்கருத்துகளை கேட்கும் அளவுக்குக் கூட சகிப்புத்தன்மை இல்லாமல் இந்த மத்திய அரசு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவது என்பது அவர்களுடைய பொறுமையின்மையின் எடுத்துக்காட்டாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இது போன்று ஒருபோதும் நடந்ததில்லை. அப்போது இதைவிட மோசமாக நடந்துகொண்ட பாஜக உறுப்பினர்களை நாங்கள் வெளியேற்றவில்லை. அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. அந்த பக்குவம் மத்திய பாஜக அரசுக்கு இல்லாததற்கு வருத்தப்படுகிறேன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடக்கிறது. காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக மாற்றுவதால் 30 லட்சம் கூலித் தொழிலாளிகள் பெறக்கூடிய நன்மை என்ன? விவசாயிகள் பெறக் கூடிய நன்மை என்ன? என்பது பற்றி தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். பெயர் மாற்றம் மட்டுமே போதுமானதில்லை. பாதுகாப்பு வேளாண் மண்டலம் அறிவிப்பை வரவேற்கிறேன். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதனால் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் கிடைக்க உள்ள பலன் முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். பெயர் மாற்றம் என்பது இயல்பான செயல். ஒரு பகுதியின் பெயரை முதலமைச்சர் மாற்றியிருப்பதால் கிடைக்கக் கூடிய நன்மை என்ன கிடைக்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் குறித்து நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டும். மக்கள் அவரவர் பகுதியில் அமைதியாக தான் போராட்டம் நடத்துகின்றனர். அறவழியில் போராடும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : ஏமாந்து போன ரஜினி, ஏமாற்றிய மக்கள் மன்ற நிர்வாகிகள் - என்ன தான் நடந்தது?