காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
இக்கூட்டத்தின் முடிவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு மவுன அஞ்சலி செலுத்த கே.எஸ். அழகிரி வேண்டினார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: வரம்புகளை கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்.பி.பி.