ETV Bharat / state

கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு பாராட்டு!

சென்னை: சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

chennai
chennai
author img

By

Published : Jan 21, 2020, 6:31 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவருபவர் ரந்தோஷ். அவரது மனைவி போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையை கடத்திச்சென்றார்.

செவிலியர் ஜூலியட்

அதைத்தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணைப் பற்றி எழும்பூர் மருத்துவமனை செவிலி ஜூலியட் அளித்த தகவலின்பேரில் குழந்தை தீவிரமாகத் தேடப்பட்டுவந்தது. அதையடுத்து எட்டு நாள்களுக்குப் பின் எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. கடத்திய பெண்ணின் பெயர் தேவி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணைப் பற்றி தகவலளித்த செவிலி ஜூலியட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

chennai
மீட்கப்பட்ட குழந்தையுடன் தாய், தந்தையர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜூலியட் கூறுகையில், 'கடந்த 14ஆம் தேதியன்று எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையின் நான்காவது மாடியில் சந்தேகத்திற்கிடமாகக் கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் சுற்றித்திரிவதை நான் பார்த்தேன். சந்தேகப்பட்டு அவரிடம் பேசியபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்' என்றார்.

கடந்த 18ஆம் தேதி குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம், சிசிடிவி காட்சியை காண்பித்தபோது அதைப்பற்றி காவலர்களிடம் கூறியதையும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த பெண்ணை ரோந்துப் பணியிலிருந்த காவலர் விசாரிக்கையில் அவர் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசைவார்த்தைக் கூறி குழந்தையை கடத்திய பெண்!

Intro:Body:சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி 7மாத குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்க உதவிய எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியருக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வரும் ரந்தோஷ் போஸ்லே தம்பதியினருக்கு பிறந்த 7மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அடையாளம் தெரியாத பெண் அழைத்து சென்று பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைத்து குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் 8 நாட்களுக்கு பின் எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் வைத்து கடத்திய தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.பின்னர் குழந்தையை கடத்திய பெண்ணை பற்றிய தகவல் அளித்த எழும்பூர் மருத்துவமனை செவிலியரை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செவிலியர் ஜூலியட்.

கடந்த 14ஆம் தேதியன்று எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையின் 4வது மாடியில் சந்தேகத்திற்கிடமாக கையில் குழந்தையுடன் புட்டிப்பால் கொடுத்து கொண்டு ஒரு பெண் சுற்றி திரிவதை தான் பார்த்ததாகவும்,பின்னர் தாய் பால் கொடுக்காமல் இருந்ததை கண்டு சந்தேகப்பட்டு கேட்டதற்கு அந்த பெண் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பால் கொடுக்கவில்லை எனவும் கூறினார். மேலும் கடந்த 3மாதத்திற்கு பின்பு தான் இந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றதாகவும் கூறியுள்ளார்.பின்னர் அந்த பெண் மருத்துவமனையை விட்டு சென்றார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி தனிப்படை போலீசார் குழந்தை கடத்தியதாக பெண்ணின் புகைப்படம் மற்று சிசிடிவியை தன்னிடம் காண்பித்தார். அப்போது இதே போன்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாகவும்,பின்னர் நேற்று எழும்பூர் மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலரிடம் அந்த பெண் சிக்கியுள்ளார். அப்போது அந்த பெண்ணை விசாரித்த போது முரணாக பதில் கூறியுள்ளார். மேலும் 3 மாத குழந்தை எனவும் பெயர் சாம் எனவும் மருத்துவரிடம் பொய்யாக கூறி சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. மேலும் அந்த குழந்தை அந்த பெண்ணிடம் அழுது கொண்டே இருப்பதை கண்டு அடையாளம் கண்டு அந்த பெண்ணை பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறினார்.இது கடந்த 12ஆம் தேதி காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது.இதனால் காவல்துறைக்கு உதவியதாக கூறி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டுகள் தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.