ETV Bharat / state

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு குவியும் வாழ்த்து - West Coast Train to Chennai Central

தீபாவளியன்று விரைவு ரயிலில் வந்த கர்ப்பிணி பயணிக்கு பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ரயிலில் குழந்தை பெற்றடுத்து தாய் - பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு வாழ்த்து...

author img

By

Published : Oct 25, 2022, 7:10 PM IST

சென்னை: மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்டு விரைவு வண்டியில் சாந்தினி (29) என்ற நிறைமாத கர்ப்பிணி, திருப்பத்தூர் ரயில் நிலைய அலுவலரான தனது கணவர் அஸ்வின் குமாருடன் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைப்பெற, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர்.

அப்போது நிறைமாத கர்ப்பிணியான சாந்தினிக்கு ரயில் பயணத்தின்போது பிரசவவலி ஏற்பட்டது. ரயிலானது மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை எண் 2-க்கு வந்தபோது நடைமேடை அலுவலில் இருந்த பரமேஸ்வரி என்ற பெண் தலைமைக் காவலர் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக சாந்தினியை ரயிலில் இருந்து இறக்கி, அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச்சென்று அமரவைத்து, உடனிருந்து கவனித்துக்கொண்டார்.

இதற்கிடையே சாந்தினிக்கு பிரசவவலி அதிகமாகி சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அரக்கோணம் ரயில்வே மருத்துவர்களால் சாந்தினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சுமார் 3.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் உள்ள நிலையில் துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை ரயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று பிரசவத்திற்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் பரமேஸ்வரியை ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் இருப்புப்பாதை காவல் உயர் அலுவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.