ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் சட்டவிரோதப் போக்கைக் கண்டித்து பிப். 13இல் மாநாடு - தமிழ்நாடு அரசின் சட்ட விரோதப் போக்கைக் கண்டித்து பிப்.13 இல் மாநாடு

சென்னை: தமிழ்நாடு அரசின் சட்டவிரோதப் போக்கைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர், இயக்கங்கள் சார்பில் சென்னையில் பிப்ரவரி 13இல் மாநாடு நடைபெறும் என, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி
author img

By

Published : Jan 9, 2021, 5:15 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர், "மாநில அரசு மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் சார்ந்த அமைப்புகள், இதனை எதிர்த்து அறவழியில் போராடிவருகின்றன. இருப்பினும், மாநில அரசு காவல் துறையை ஏவி, அடக்குமுறையைப் பின்பற்றிவருகிறது.

இது ஜனநாயகப் படுகொலையாகும். கூடங்குளம், காவிரி, மீத்தேன், ஜல்லிக்கட்டு, எட்டு வழிச்சாலை, நீட், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு உரிமை சார்ந்த, வாழ்வாதாரப் பிரச்சினை போராட்டங்களில் பங்கெடுத்த அரசியல் கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள், பங்கேற்பாளர்கள், பொதுமக்கள் மீது அதிமுக அரசினால் போடப்பட்டுள்ள பொய்யான, புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். பொய் வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, "தமிழ்நாடு அரசு அமைதி வழியில் போராடுபவர்களை உபா (UAPA) என்ற சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர்.

வரும் பிப்ரவரி 13இல், சென்னையில் நடக்கும் மாநாட்டில் அனைத்து இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவை நாட இருக்கிறோம். இம்மாநாட்டில் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்" என்றார்.

எஸ்.டி.பி.ஐ. இயக்கத்திலிருந்து தெஹ்லான் பாகவி, தமிழக மக்கள் புரட்சி கழகத்திலிருந்து அரங்க குணசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் பொழிலன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.