சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(ஏப்ரல் 16) நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் மூலம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை இல்லை என உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
![EPS honoring MGR Jayalalithaa film at AIADMK executive committee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-admk-executive-meeting-reso-7210963_16042023160808_1604f_1681641488_957.jpeg)
- வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்துதல்.
- உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்.
- 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்தல்.
- தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்குக் கடும் கண்டனம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பதற்கு கண்டனம்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தல். - தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ள திமுக அரசுக்குக் கடும் கண்டனம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள திமுக அரசுக்குக் கடும் கண்டனம்.
- திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கட்சிக்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு, பொதுச் செயலாளர் தலைமையில் ஒன்றிணைந்து, தக்க பாடம் புகட்டிட, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சூளுரை.
- நடந்தாய் வாழி காவிரி திட்டம் மற்றும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட, மத்திய அரசுக்கு அழுத்தம் தர, திமுக அரசை வலியுறுத்தல். அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
- சட்டமன்ற மரபுகளை, ஜனநாயக மாண்புகளை சீரழிக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள்.
- தமிழ் நாட்டில் பெருகிவரும் போதை கலாசாரத்தை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
- வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கட்சியின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துப்பட்டியல் விவகாரம்: அடுத்த குறி அதிமுக? - அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்ன?