அதில், "முதமைச்சர் பழனிசாமியை நாகரிகமற்ற முறையில் விமர்சித்துப் பேசிய ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவி வெறியில் வெளிப்படும் அவரது உளறல் மூலம், இந்த அளவிற்கு அவரும் திமுகவும் தாழ்ந்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, "ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி இருவரின் அரசியல் ஆளுமையை ஒப்பிட்டுப் பேசும்போது நான் பேசிய சில வார்த்தைகளை ஒட்டி வெட்டி சமூக வலைதளங்களில் பரப்புவதாக அறிகிறேன். அதற்கு நான் பொறுப்பல்ல. முதலமைச்சரை இழிவாகப் பேசுவது என் நோக்கமல்ல" என்று விளக்கமளித்தார்.
முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினர் கவனத்துடன் பேச வேண்டும் என்றும், கண்ணியக் குறைவான பேச்சை திமுக ஏற்காது எனவும் அறிவுறுத்தினார்.