ETV Bharat / state

போலி நியமன ஆணை: பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள் - பள்ளிக்கல்வித்துறையில் போலி நியமன ஆணை

பள்ளிக் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கிய மோசடி கும்பல் குறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

DPI
DPI
author img

By

Published : Oct 4, 2021, 7:45 PM IST

Updated : Oct 4, 2021, 8:30 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு தேர்வு துறையில், இளநிலை பணியாளர் பணி உள்ளதாக கூறி, அவர்களிடம் 2 லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனக்கூறி, தலா 50 ஆயிரம் ரூபாய் வரை முன் பணம் பெற்றுள்ளனர். பின் சான்றிதழ்களின் நகல்கள் பெற்று, அவர்களுக்கு போலி நியமன ஆணை வழங்கியுள்ள உள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்து பணியாற்றினால் போதும்,வங்கி கணக்குக்கு மாதந்தோறும் சம்பளம் வரும் என்று கூறி கும்பல் ஆசை வார்த்தை கூறியுள்ளது. இது குறித்து, செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்துக்கு வந்த இளைஞர்களிடம், அடையாளம் தெரியாத கும்பலை சேர்ந்தவர்கள் பணத்தை பெற்று, பணி நியமன போலி ஆணை மற்றும் பணியில் சேர்ந்ததற்கான கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் பலரும் போலி பணி நியமன ஆணையை வைத்து, வேலைக்குச் சேருவதற்கு முற்பட்டுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தை சமூக வலைதளங்கள், செய்திகள் மூலமாகவும், அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த மோசடி குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அரசு வேலைக்கு பணம் கொடுத்து சேருமாறு யாராவது முயன்றால், பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மோசடி தடுப்பு பிரிவு அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Oct 4, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.