ETV Bharat / state

போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்! - நடிகர் விஜய் சர்ச்சை

லியோ திரைப்படத்தின் பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 26, 2023, 9:23 AM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ கடந்த 22ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை - கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ''நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் ”ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க மற்றும் பொகையல அறுவடைக்கு தயாரான” என தொடங்கும் பாடல் வரிகள் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளன.

மேலும் இப்பாடல் வரிகள் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக'' அவர் குற்றம் சாட்டி உள்ளார். குறிப்பாக தமிழகத்தில் போதைப் பொருட்களைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழகத்தில் போதைப் பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் எனவும் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Chennai crime news: சென்னை மாநகரில் இன்று நடந்த குற்றச் சம்பவங்கள்!

இந்த நிலையில் ''இப்பாடல் வரிகள் மூலமாக நடிகர் விஜய் இளைஞர்களுக்கு மத்தியில் போதைப் பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இளைஞர்களை போதைப் பயன்பாட்டிற்கு தூண்டிவிடுதல் போன்ற குற்றத்திற்காக நடிகர் விஜய் மற்றும் பாடலை எழுதிய நபர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி'' புகார் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை 10 மணி அளவில் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

vijay script
நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட் வெளியாகும் நேரத்தில் சர்ச்சை கிளம்புவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி, 2018இல் வெளியான சர்க்கார் ஆகியப் படங்களின் போஸ்டர்களில் விஜய் புகைப்பிடித்தவாறு இருக்கும். அப்போது பாமக தலைவர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்தகைய புகைப்பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடிக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவர் மகன் விவகாரம் - புரிதல் இல்லாதவரின் விமர்சனம் என பேரரசு கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.