திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கடந்த 14ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில், சென்னை ராஜமங்கலம் சமிக்ஞை (சிக்னல்) சந்திப்பான 200 அடி சாலை வழியாக அலுவலக பணிக்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது வலப்புறமாக வந்த இருசக்கர வாகனம் பாலாஜி சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் அவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில் தனது சகோதரர் பாலாஜி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது இளைய சகோதரர் ஜெயபிரகாஷ் திருமங்கல் போக்குவரத்துப் புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவலர்கள் அவரது புகாரை வாங்காமல் விபத்தை ஏற்படுத்தியவருக்குச் சாதகமாக நடந்துள்ளனர்.
இதில் அதிருப்தியடைந்த ஜெயபிரகாஷ், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க:பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பேன் - வசந்தகுமார்