ETV Bharat / state

Home Work எழுதாத 4ஆம் வகுப்பு மாணவிக்கு சரமாரி அடி - ஆசிரியை மீது புகார்! - பள்ளி மாணவியை தாக்கிய ஆசிரியர்

வீட்டுப்பாடம் எழுதாத 4ஆம் வகுப்பு சிறுமியை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்

author img

By

Published : Jul 2, 2022, 6:16 PM IST

சென்னை: கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 4ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி இன்று (ஜூலை 02) வழக்கம்போல் பள்ளிக்குச்சென்றார். பள்ளியில் வகுப்பு ஆசிரியை மாணவர்களின் வீட்டுப்பாடத்தை சோதனை செய்துவந்தார்.

அப்போது, அந்த மாணவி தமிழ்ப்பாடத்தில் வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தால், வகுப்பறையில் வைத்திருந்த கம்பால், வலது கால் மற்றும் இடது கையில் தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் சிறுமிக்கு கை, காலில் ரத்தம் கட்டி வீக்கமடைந்தது.

இந்நிலையில் ஒரு முதலுதவி சிகிச்சை கூட பள்ளியில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மாலை பள்ளியில் இருந்து சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்த தந்தையிடம், வகுப்பு ஆசிரியை தன்னை பயங்கரமாக அடித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால், அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து ஆசிரியை பார்வதி மீது தந்தை, சத்யா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்

புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையைத் தாக்கிய ஆசிரியையிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

வீட்டுப்பாடம் முடிக்காத 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தாறுமாறாக தாக்கிய சம்பவம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மகளை முதல் நாளில் ஸ்கூலில் சேர்க்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.