சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ராஜேஷ். இவர் தன்னைக் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், தொழிலதிபர் வெங்கடேஷ், சீனிவாச ராவ் உள்பட 10 பேர் மீது புகார் அளித்தார்.
இப்புகாரில் காவல் துறை அலுவலர்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவு காவல் துறையினரைத் தேடும் சிபிசிஐடி
பின்னர் தலைமறைவாக இருந்து வந்த கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரக்கூடிய காவல் உதவி ஆணையர் உள்பட 9 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆன்லைனில் புகாரளித்த அறப்போர் இயக்கம்
இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அலுவலர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் உள்துறைச் செயலாளர் பிரபாகர், முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு