சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் விவேகா இந்து இயக்கத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "சமீபத்தில் சியட் டையர்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். அந்த விளம்பரம் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றம். அதை தூண்டும் வகையில் நடிகர் கார்த்தியின் விளம்பரம் அமைந்துள்ளது.
இந்த விளம்பரத்தில் பொறுப்பற்ற வகையில் நடித்த நடிகர் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!