சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2 ஆயிரத்து 407 பேர் நியமனம் செய்வதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா திருத்தப்பட்ட ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக் கல்வித்துறையில் 2 ஆயிரத்து 407 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்விற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, அவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவித்துள்ள நிலையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 155 விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும்.
பட்டதாரி ஆசிரியர் பணியில் ஆயிரத்து 874 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர் பணியில் 3ஆயிரத்து 987 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஆயிரத்து 358 காலிப் பணியிடங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 காலிப் பணியிடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வரவில்லை. அரசு அனுமதி அளித்த உடன் அறிவிப்புகள் வெளியிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் வேண்டும்!