சென்னை: சிதம்பரத்தை சேர்ந்த செல்வராசுவின் மனைவி சுமதி பிரசவத்திற்காக கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, ஆரம்ப சுகாதர நிலையத்திலிருந்து கிளம்பிய மருத்துவர் தொலைப்பேசியில் அளித்த அறிவுறித்தலின்படி, செவிலியர்கள் சுமதிக்கு சிகிச்சையளித்துள்ளனர்.
ஆண் குழந்தையை சுமதி பிரவித்த நிலையில், தாய், சேய் இருவரும் மரணமடைந்துள்ளனர். மருத்துவர், செவிலியர்களின் அலட்சிய சிகிச்சையால் மரணமடைந்ததால் நடந்த இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் செல்வராசு புகார் அளித்தார்.
அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனைவியையும், குழந்தையையும் பறிகொடுத்த செல்வராசுவுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகள்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்