கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு, தனியார், உள்ளாட்சி துறையின் கீழ் பணிபுரிந்த சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பிரதமரின் காிப் கல்யான் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய்க்கான இழப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் ஏப்ரல் 24 முதல் அக்டோபர் 23 வரை 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இறந்தவரின் அடையாளச் சான்று, மனுதாரரின் அடையாளச் சான்று, மனுதாரர், இறந்தவருக்கான உறவு முறை சான்று, கரோனா நோய் உறுதி செய்யப்பட்டதற்கான ஆய்வக அறிக்கை, இறப்பு குறித்து மருத்துவமனையால் வழங்கப்பட்ட அறிக்கை ஆகியவற்றின் நகல், இறப்புச் சான்று (அசல்), இறந்தவர் கரோனா பெருந்தொற்று தொடர்பான நேரடி பணியில் பணியமர்த்தப்பட்டார் என்பதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், டிஎம்எஸ், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரியில் மனு அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்