ETV Bharat / state

ரிப்பன் மாளிகையில் ஆணையர் ககன் தீப் சிங் கொடி ஏற்றினார் - மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தேசிய கொடி ஏற்றினார்.

ககன் தீப் சிங் கொடி ஏற்றினார்
ககன் தீப் சிங் கொடி ஏற்றினார்
author img

By

Published : Aug 16, 2021, 6:42 AM IST

சென்னை: ரிப்பன் மாளிகையில் 75ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

ஆசிரியர்களுக்கு பாராட்டு

சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 2020-2021ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மண்டலம் மற்றும் துறையின் இணை, துணை ஆணையர்கள், முதன்மை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஓடும் இருசக்கர வாகனத்தில் 75 யோகாசனங்கள் செய்து அசத்திய இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.