ETV Bharat / state

பட்டாசு கழிவுகளை தனியாக சேகரிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு! - மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு 2 கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்க 2 கனரக வாகனங்கள்- ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு!

author img

By

Published : Oct 22, 2022, 8:03 PM IST

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி காலத்தில் மட்டும் பட்டாசுக் கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகரின் பல்வேறு சேகரமாகும் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை அலுவலர்களுடன் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் கட்டட கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டது, பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக தனியாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்.

தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் பிறகு அங்கு இருந்து கழிவுகள் முறையாக கும்மிடிபூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:எடப்பாடி மீது நடவடிக்கையா? - நியாயமான கேள்வி என்கிறார் கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.