ETV Bharat / state

புது வருடத்தின் முதல் நாளிலேயே வணிக பயன்பாட்டு கேஸ் விலை குறைப்பு! - வணிக கியாஸ் விலை குறைவு

Commercial LPG price cut: புத்தாண்டின் முதல் நாளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பது உணவகம் சார்ந்த தொழில்புரியும் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Commercial use cylinder price reduction on the first day of the year
ஆண்டின் முதல் நாளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 10:32 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் துவக்கத்தில் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையின் இன்று (ஜன.1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்த்தப்பட்டு ரூ.1,968.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி ரூ.39 குறைக்கப்பட்டது. தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி விலை குறைக்கப்பட்டது உணவகம் சார்ந்த தொழில் நடத்துபவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில் இன்று புத்தாண்டு பிறந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எகிறுமா அல்லது குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் சிலை குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாதம் மாதம் மாற்றம் ஏற்படும் நிலையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதே ரூ.918.50 விலையில் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சினிமா பாணியில் நடந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.