ETV Bharat / state

LPG Gas Cylinder Price : காலையிலேயே ஒரு குட் நியூஸ் - கமர்ஷியல் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு - கேஸ் சிலிண்டர் விலை

சென்னையில் கமர்ஷியல் சிலிண்டர் விலை ரூ. 93 குறைந்து உள்ளது. இந்த விலைக் குறைப்பு, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளதால், உணவு வகைகளின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

LPG Gas Cylinder Price : காலையிலேயே ஒரு குட் நியூஸ் - கமர்ஷியல் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு

author img

By

Published : Aug 1, 2023, 10:01 AM IST

சென்னை: ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று, எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை பெரிய அளவில் குறைத்து உள்ளன. ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை அதிகரித்து இருந்த நிலையில், தற்போது விலையில் சரிவு காணப்படுகிறது.

சென்னையில் 19 கிலோ கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் விலை குறைந்து உள்ளது. ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்ஷியல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.93 குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கமர்ஷியல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.93 குறைந்து ரூ.1852 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிலாங்குளம் சோழர், பாண்டியர் வரலாற்று ஆவணம்; தொல்லியல் சின்னமாகுமா?

சென்னையில் கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் விலை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1,917 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதம் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், மார்ச் மாதம் 351 ரூபாய் உயர்த்தப்பட்டதால், 2,268 ரூபாயை தொட்டது.

பின்னர், ஏப்ரல் மாதத்தில் 76 ரூபாயும், மே மாதத்தில் 171 ரூபாயும் விலை குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் 84 ரூபாய் அதிகரித்த சிலிண்டர் விலை, கடந்த மாதம் 8 ரூபாய் குறைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் விலை 93 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ள நிலையில்,,கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 850 ரூபாயை தொட்டு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக சிலிண்டர் விலை ஆயிரத்து 831 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றம் தான்: கேஸ் சிலிண்டர்களின் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் நாளில் நிர்ணயம் செய்கின்றன. ஆனால், வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பல மாதங்களாக, எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாதமும், வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில்மாற்றமின்றி ரூ.1,118 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை - மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.