அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய பின்னர், நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் முன்னிலையில், நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மாநில தலைவர் எல்.முருகன், அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு," 100% பரப்புரையில் ஈடுபடுவேன் என்றார். தொடர்ந்து, அதிமுகவை ஆதரித்து பரப்புரை செய்வீர்களா என்ற கேள்விக்கு, "தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன்" எனத் தெரிவித்தார்.