சென்னை: தலைமைச் செயலகத்தில் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்க அரசாணை பிறப்பித்த பின்னரும் தேக்கத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாகக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்குப் பேராசிரியர்களாகப் பதவி வழங்க வேண்டும். அந்தப் பதவி உயர்வுக்கு பி.ஹெச்.டி. பட்டத்தைக் கட்டாயமாக்கக் கூடாது.
இந்தக் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உயர் கல்வித் துறைச் செயலர் தெரிவித்தார். இதன் காரணமாக இந்த மாதம் நடைபெறவிருந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.
எங்களுடைய கோரிக்கைகளை இம்மாதத்திற்குள்ளாக நிறைவேற்றாவிட்டால் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவேன் - தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி