சென்னை: திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீநிதி(19), சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் ஸ்ரீநிதி முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீநிதியின் பெற்றோர் ஏற்கனவே வாடகை வீட்டில் இருந்தபோது வீட்டின் உரிமையாளர் வினோத்திடமிருந்து 7 பவுன் நகை வாங்கியதாகவும் அதனை வினோத் கேட்டபோது இரண்டு பவுன் நகை வாங்கியதாக ஸ்ரீநிதியின் பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீநிதியின் பெற்றோர்களிடம் விசாரித்தனர்.
தனது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மகளின் இறப்புக்கு காரணமான வினோத்தை போலீசார் கைது செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக இருந்து வருவதாக கூறி திருவேற்காடு போலீசாரை கண்டித்து திருவேற்காட்டில் நேற்று 100 க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற திருவேற்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக ஸ்ரீநிதியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்