ETV Bharat / state

கல்லூரி மாணவன் மர்மமான முறையில் மரணம்... - College student died near Korattur railway station

காவல்துறையினர் கல்லூரி மாணவன் சந்தோஷ் அடித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டரா அல்லது ஓடும் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவன் சந்தோஷ்
கல்லூரி மாணவன் சந்தோஷ்
author img

By

Published : Jan 10, 2022, 1:08 PM IST

சென்னை: ஆவடி அடுத்த அண்ணனூர் அன்னை சத்யா நகர், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கார் டிரைவர். இவரது மனைவி முத்து கிருஷ்ணவேணி. இவர், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (20).

இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 8) மதியம் சந்தோஷ், தந்தை ராதாகிருஷ்ணனிடம் பணம் வாங்கிக் கொண்டு, சினிமா பார்த்து வருவதாகக் கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், நேற்று (ஜனவரி 9) காலை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சந்தோஷ் தண்டவாளம் அருகில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

கல்லூரி மாணவன் சந்தோஷ்
கல்லூரி மாணவன் சந்தோஷ்

இதனையடுத்து, காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தோஷ் அடித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டரா அல்லது ஓடும் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதிதாக வந்துள்ள ‘டெல்டாக்ரான்’- சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.