சென்னை: மெரினா கடற்கரை நேதாஜி சிலை பின்புறம் இன்று அதிகாலை 10 மாணவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடினார். உடனடியாக அங்கு இருந்த மீனவர்கள் சிலர் கடலில் தத்தளித்த அந்த மாணவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அந்த மாணவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மெரினா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்த நபர் குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஹரின் ஜெயின் என்பதும்; இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் தங்கிப் படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இன்று அதிகாலை மாணவர்களுடன் சேர்ந்து மெரினாவில் குளிக்க வந்தபோது கடல் மணலில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மகளை முதல் நாளில் ஸ்கூலில் சேர்க்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!