சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் இருந்து 43 மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து சென்னை புறப்பட்டது. பேருந்து தேனாம்பேட்டை வரை செல்வதற்காக தாம்பரம் நோக்கி வண்டலூர் இராணியம்மன் கோயில் அருகே சென்றபோது பேருந்தில் திடீரென புகை வந்துள்ளது.
உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மாணவர்களை ஓட்டுநர் கீழே இறக்கிவிட்டுள்ளார். அதற்குள் பேருந்தில் தீ பற்ற தொடங்கி மூன்று நிமிடத்திற்குள் பேருந்து முழுவதும் தீ பற்றியது. பின்னர் தாம்பரத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இவ்விபத்தால் பெருங்களத்தூரில் சுமார் இரண்டு மனி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டேரி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.