சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்று (ஜூலை 5) காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்தும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, அரசு அறிவித்த தளர்வுகளின்படி, பொதுப்போக்குவரத்து, கோயில்கள், கல்லூரிகள் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முதல் செயல்படுகின்றன.
யார் யாருக்கு கல்லூரிகள்
SRF/JRF, M.Phil., Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை (Educational Project Works) தொடர்புடைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பிற மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக் கழகங்கள் வர அனுமதியில்லை.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!