ETV Bharat / state

நாளை முதல் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: அமைச்சர் துரைக்கண்ணு - pollachi jayaraman

சென்னை: கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நாளை முதல் ஆறு மாதங்கள் நடைபெறும் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

assembly
author img

By

Published : Jul 11, 2019, 3:04 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை அவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டில் கொப்பரைத் தேங்காயை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ‘தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க அரசு அனைத்துவிதமான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் இருந்து 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலைக் குறையும்போது, விவசாயிகள் அவற்றை மதிப்புகூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்துவருகின்றனர்.

சமீப காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்துவருகிறது. விலை ஏற்ற-இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் மையங்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசினால் 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரை கிலோ ஒன்றிற்கு 99 ரூபாய் 20 பைசா மற்றும் அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றிக்கு 95 ரூபாய் 21 பைசா என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்.

இந்தக் கொள்முதல் செய்யும் பணி நாளை முதல் ஆறு மாதங்கள் நடைபெறும். ஐந்தாயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

Intro:கொப்பரைத் தேங்காய் நாளை முதல் 6 மாதம் கொள்முதல்
சட்டப்பேரவையில் அறிவிப்பு Body:கொப்பரைத் தேங்காய் நாளை முதல் 6 மாதம் கொள்முதல்
சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் பேரவைத்துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டில் கொப்பரைத் தேங்காயை குறைந்தப்பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிரிக்க அரசு அனைத்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது தேங்காய்கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் , தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் , விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டர் பரப்பில் தென்னை சாகுப்படி செய்யப்படுகின்றன. இவற்றில் இருந்து 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலைக் குறையும் போது, விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தப்பட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது. விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் மையங்களை திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசினால் 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தப்பட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரை கிலோ ஒன்றிற்கு 99 ரூபாய் 20 பைசா மற்றும் அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றிக்கு 95 ரூபாய் 21 பைசா என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். இந்த கொள்முதல் செய்யும் பணி நாளை முதல் துவங்கி 6 மாதம் நடைபெறும்.
5 ஆயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக்கொப்பரையும் கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத்துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி உள்ள குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் டான்பெட் நிறுவனத்தின் லாபத்தில் இருந்து விவசாயிகள் பயனடையும் வகையில் 5 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் துரைக்கண்ணு, தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் அரசானது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.