ETV Bharat / state

ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - ஐஜி பரமேஷ் - Fani Cyclone

சென்னை: ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக, இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி பரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐஜி பரமேஷ்
author img

By

Published : May 2, 2019, 6:48 PM IST

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ஃபானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபானி புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும், கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும் எனவும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி பரமேஷ் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ஃபானி புயல் உருவான நாளிலிருந்து இந்திய கடலோர காவல்படை சார்பாக கப்பல்களும், விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்களுக்கும் கடற்படை கப்பல்களுக்கும் தேவையான எச்சரிக்கைகள், வானிலை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

எங்களுடைய ரேடார் நிலையங்கள் மூலம் தமிழிலும் மற்ற பிராந்திய மொழிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன .

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் விசாகபட்டணத்தில் நான்கு மீட்பு படைகள், நிவாரண பொருட்டுகளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் மற்றும் இரண்டு மீட்பு விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோர காவல்படை அதிகாரிகள் சென்னை, விசாகப்பட்டினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பேசிய அவர், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மன்னார் வளைகுடா, பாக் பே மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. 24 மணிநேரமும் கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என கூறினார்.

இந்தியக் கடலோர காவல் படை கிழக்கு மாகாண ஐஜி பரமேஷ்

பாணி புயல் முன்னெச்சரிக்கை,தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐஜி பரமேஷ் பேட்டி 

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
 
 பானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பானி புயலால்  தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தாலும், கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும் மற்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது .இருப்பினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 

பானி புயல் தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்  இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐஜி பரமேஷ் ஈ டிவி பாரத்திற்கு பிரத்தேயேக பேட்டி அளித்தார் .

பாணி புயல் முன்னெச்சரிக்கையாக  என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு 

பாணி புயல் ஏப்ரல் 25-ம் தேதி அன்று உருவானது .அன்றைய நாளிலிருந்து இந்திய கடலோர காவல்படை சார்பாக ரோந்து கப்பல்களும் ,விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன .மீனவர்களுக்கும் ,கடற்படை கப்பல்களுக்கும் தேவையான எச்சரிக்கைகள்,வானிலை குறித்த அறிவிப்புகள்  தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது .இதன் மூலம் அவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர் .எங்களுடைய ரேடார் நிலையங்கள் மூலம் தமிழிலும் மற்ற பிராந்திய மொழிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ,எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன .

பாணி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகபட்டணத்திலும் ,சென்னையிலும்  நான்கு மீட்பு படைகள்,  நிவாரண பொருட்டுகளுடன் கூடிய இரண்டு  கப்பல்கள் மற்றும் எந்த நேரத்திலும்  தயாராக இரண்டு மீட்பு விமானகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன .

பானி புயல் தொடர்பாக தமிழக அரசிடம்  ஏதேனும் பேசியிருக்கிறர்களா என்ற கேள்விக்கு 

எங்களுடைய கடலோர காவல்படை  அதிகாரிகள் சென்னையிலும் ,விசாகப்பட்டினத்திலும் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் .அரசு அதிகாரிகளோடும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் தேவையான நடவடிக்கைகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார் .

மேலும்  இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படை ஏதும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு 

இலங்கையில்எதிர்பாராவிதமாக  நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மன்னார் வளைகுடா ,பாக் பே மற்றும் தென்தமிழக  கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.24 மணிநேரமும் கடலோர காவல் கப்பல் மற்றும் விமானங்கள் மூலமும் தீவிர ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் .

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.