இன்று தொடங்கி ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல் ’ஸ்ட்ராட்டன்’ சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி பரமேஸ்வரன் தலைமையில் சென்னை துறைமுகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து வரவேற்றனர். இதில் இந்திய கடலோர காவல்படை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சென்னை அருகே நடுக்கடலில் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள இந்தியக் கடலோர காவல் படை ரோந்து கப்பலான சவுரியா மற்றும் இரண்டு சிறிய கப்பல்கள் சென்னை வந்துள்ளன. இரு நாட்டினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய உத்திகள், தகவல் பரிமாற்றம், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் நடைபெற இருக்கின்றன.