ETV Bharat / state

'கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பரப்புரை' - வைகோ

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறேன் என்ரு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Mar 21, 2019, 5:37 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, திமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அன்பு தங்கை கனிமொழியை ஆதரித்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பரப்புரையில் ஈடுபட இருக்கிறேன்.

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்

இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிர்ப்பு அலை வீசுவதுபோல, தமிழகத்தில் அதிமுக அரசுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. எனவே 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளே மகத்தான வெற்றியை பெறும். வாக்காளர்கள் அந்த தீர்ப்பை தருவார்கள் என்று நிறைந்த நம்பிக்கையோடு எனது பரப்புரையை நான் தொடங்க இருக்கிறேன், என்றார்.

மதிமுக தரப்பில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட சின்னம் ஏதாவது கேட்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்களது வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போதுதான் அதை பற்றிக் குறிப்பிட முடியும், என்றார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

Body:சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

நடைபெற இருக்கின்ற 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் போட்டியிட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி அடைவதற்காக நாளை முதல் தனது பிரசாரத்தை துவங்குகிறேன்

நாளை தூத்துக்குடியில் போட்டியிடுகின்ற அன்பு தங்கை கனிமொழி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் துவங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன்

இந்தியாவில் எங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல அண்ணா அதிமுக ஆட்சிக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு இருக்கிறது எனவே 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி ஸ்டாலின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி மகத்தான வெற்றி பெறும் வாக்காளர்கள் அந்த தீர்ப்பை தருவார்கள் என்று நிறைந்த நம்பிக்கையோடு நான் எனது பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன்

மதிமுக தரப்பில் போட்டியிடுவதற்கு குறிப்பிட்ட சின்னம் ஏதாவது தேர்தல் ஆணையத்தில் கேட்கப்பட்டு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு

வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதுதான் அதை குறிப்பிட முடியும்

7 பேரின் விடுதலை யில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு மதிப்பளிக்காமல் தமிழக அமைச்சரவைக்கு அனுப்பி வைத்த கோரிக்கையை குப்பையில் போட்டது போல் பேசுகின்றார் ஆளுநர்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அபிப்பிராயத்தை கேட்டது ஆளுநர் அது வரம்புமீறிய செயல் அல்லது அதிமுக கேட்டிருந்தால் அது மிகப் பெரிய துரோகம் இது என்னுடைய கருத்து

Conclusion:இவர் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.