ETV Bharat / state

அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முறையாக அறிவிக்கவில்லை - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு - சென்னை மாவட்ட செய்தி

அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முறையாக அறிவிக்காததால் இப்போது பாஜக அரசு நிலக்கரி சுரங்க விவகாரத்தில் விளையாடுவதாக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 6, 2023, 9:34 AM IST

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமான தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 6 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இது அப்பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று(ஏப்ரல் 5) சட்டப்பேரவை கூட்டத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நானும் டெல்டா காரன் தான், இந்த திட்டத்தை இங்கே வருவதற்கு அனுமதிக்க மாட்டேன்" எனப் பதிலளித்திருந்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, "தஞ்சை டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கும், மீத்தேன் எடுப்பதற்கும் ஒன்றிய அரசு தன்னுடைய கோர முகத்தைத் தமிழ்நாட்டின் மீது திருப்பி இருக்கிறது. தமிழ்நாடு அரசைக் கலந்து ஆலோசிக்காமல், கலந்துரையாடல் செய்யாமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு விவசாய ஜனநாயக விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாஜக அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் 700 பேர் உயிர் இழந்துள்ளனர். அதை தொடர்ந்து புதிய வேளாண்மை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசு தனது கோர முகத்தைத் தமிழ்நாட்டின் மீது திருப்பி இருக்கிறது. இதைக் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

தென்னிந்தியாவிற்கு மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியும் வேளாண்மை புரட்சியும் நடைபெறுகின்ற இந்த டெல்டா பகுதியில் இப்படிப்பட்ட செயல் மண் வளத்தையும், நீர் வளத்தையும் பாதிக்கும். ஏறக்குறைய லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதித்தால் தஞ்சை, அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். டெல்டா பகுதிகள் பேரழிவுக்கு உள்ளாகும்.

விதி 4(1)ல் ஒன்றின் அடிப்படையில் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களில் எதுவும் நடக்கக்கூடாது. அப்படி நடக்க வேண்டும் என்றால் மாநில அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும் என கூறுகிறது. அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் என அறிவித்தார்கள். ஆனால் முறையான சட்ட நுணுக்கங்களை உள்வாங்கவில்லை. சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லாததால், எழுதாததால் இப்போது இதில் பாஜக அரசு விளையாடுகிறது.

இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். காற்றாலைகளில் மின்சாரம் தயாரிக்கலாம், சூரிய வெளிச்சத்தில் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற வசதி உள்ள நிலையில் எதற்காக பழைய நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளப் பார்க்கிறது பாஜக அரசு என்று புரியவில்லை. பாஜகவினுடைய கோர முகத்தை தமிழ்நாட்டில் புகுத்த வேண்டாம்" என கூறினார்.

இதையும் படிங்க: 7 வயது சிறுவன் பலி எதிரொலி.. சென்னை நீச்சல் குளங்களுக்கு மாநகராட்சி புதிய கட்டுப்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.