ETV Bharat / state

‘மலரிதழால் தமிழ் நிலம் காத்த மாமன்னன்’ - பேரறிஞர் அண்ணாவை மறவோம்..!

இந்தியாவுக்கான அரசியல் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை அரை நூற்றாண்டுக்கு முன்னரே கற்பித்த தமிழ்த் தாயின் தலைமகன் அண்ணாவிற்கு இன்று 111ஆவது பிறந்தநாள்.

annadurai
author img

By

Published : Sep 15, 2019, 5:28 PM IST

ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன்! பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்தம் இதயமெல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன்! சிந்தை, அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்க செய்யும் வகையில் நம்மையெல்லாம் 'தம்பி' என்று அழைத்திட்ட ‘அண்ணன்’! - என மறைந்த கலைஞர் கருணாநிதி அண்ணா குறித்து மேடை ஒன்றில் பேசிய வார்த்தைகள் இவை...

அண்ணனும் தம்பியும்!
அண்ணனும் தம்பியும்!

கட்சியால் பயனடைய வேண்டும் என நினைப்பவர்களைவிட தன்னால் கட்சிக்கு என்ன பயன் என்று உழைப்பவர்கள்தான் ஒரு அரசியல் கட்சிக்கு தேவை என்று பகிரங்கமாக அறிவித்தவர், அண்ணா என்னும் சூத்திரதாரி. அந்த இடத்தில் இருந்துதான் அரசியலை அவர் அணுகியிருந்தார்.

அதனால்தான் கட்சி ஆரம்பித்த வெறும் 18 ஆண்டுகளில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆம், 67இல் திமுக ஆட்சி அமைத்தபோது அந்த கட்சிக்கு வயது வெறும் 18. சுதந்திரம் அடைந்து ‘இந்தியா’ என்ற நாட்டை உருவாக்கும் பணிகள் முழுமையடைந்திருந்தன.

மேடையில் அண்ணா
மேடையில் அண்ணா

இன்றைய அமித் ஷாக்களின் பாட்டனார்கள், தமிழ்நாட்டில் எப்படியேனும் இந்தியை திணித்துவிட வேண்டும் என்று முட்டிமோதிக்கொண்டிருந்தனர். இன்றும் அப்படித்தான் முட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை.

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் கொதித்துக்கொண்டிருந்த நேரம் அது. தமிழ் இளைஞர்கள் பலர் தீக்கிரையாகியிருந்தது பெரும் கனலாய் கனன்று கொண்டிருந்தது. மக்கள் மத்தியில் இருந்த கொதிப்புணர்வை உணர்ந்திடாதவராய், நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற மிதப்பில் தேர்தலை எதிர்கொண்டார் காமராஜர். தந்தை பெரியாரோ அப்போதைய அரசியல் சூழல்களால் காங்கிரஸுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்தார்.

அண்ணா
அண்ணா

இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் ராஜாஜியின் சுதந்திரா, கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி என பலரையும் ஒருங்கிணைத்து மாபெரும் கூட்டணியை உருவாக்கியிருந்தார் அண்ணா. அவர் தலைமையிலான கூட்டணி, எதிர்த்து நின்ற அனைவரையும் தவிடுபொடியாக்கியது. வெறும் 18 வயதே நிரம்பியிருந்த ஒரு கட்சியின் தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 179 தொகுதிகளைக் கைப்பற்றி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அண்ணா
அண்ணா

இதில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் மட்டும் 137. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ‘அண்ணா நீங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர். இதனை நீங்கள்தான் அறிவிக்க வேண்டும்’ என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜாராம் கூறியபோது, ’அதை எப்படி நானே சொல்வேன் என்று முதலில் மறுத்த அண்ணா, பின்னர் கட்சியினரின் வற்புறுத்தலால், ‘நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன். நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்’ என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாகியுள்ள பொக்கிஷங்கள்.

தேர்தலில் வென்ற கையோடு, தன்னை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த தனது சித்தாந்த தலைவரான பெரியாரை சந்தித்து அண்ணா ஆசி பெற்றார். தம்பி அண்ணாதுரையின் இந்த செயலால் நான் மணப்பெண்ணைப் போல் வெட்கப்பட்டேன் என்றார் பெரியார்.

anna with periyar
அண்ணாவும், தந்தையும்!

அதன்பின், வெறும் இரண்டு ஆண்டுகளே உயிர்வாழ்ந்த அண்ணா, மெட்ராஸ் பிரசிடன்சிக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். எந்த சட்டப்பேரவையில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு எதிராக கூக்குரலிட்டார்களோ, அதே சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!! தமிழ்நாடு வாழ்க!!! என மூன்று முறை காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்து முழக்கமிட வைத்த சுயமரியாதைக்காரன் அவர்.

அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் இருந்த சொற்ப நாட்களுக்குள் சுயமரியாதை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான பணியை முன்னெடுத்த அவர், உலக தமிழர் மாநாட்டையும் நடத்திக்காட்டி சாதித்தார். இந்திய உபகண்டத்தில் தமிழினத்தை தலைநிமிரச் செய்த முதல் தலைவர் என்றால் அவர் பேரறிஞர் அண்ணாதான். ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு எடுத்துக்காட்டாய் தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர்.

அண்ணா
அண்ணா

'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' என்ற வார பத்திரிகை ஒன்று அண்ணாவிடம் பேட்டி கண்டபோது, இந்தி மொழியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தது.

அதற்கு “இந்தி பெரும்பான்மையினரின் அடக்குமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று அவர் கூறிய இந்த ஒற்றை வரி காரணத்திற்குள் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அதேபோல், இந்தி மொழி தன்னை புதுப்பித்துக்கொள்ளவில்லை. ஆகையால் அறிவியலுக்கோ, மாணவர்களின் கல்விக்கோ அது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்று நெற்றி பொட்டில் அடித்தாற் போல் இடித்துரைத்தார் அண்ணா. உணர்ச்சிப்பொங்க பேசாமல் இப்படி அறிவார்ந்து அவர் உதிர்த்த காரணிகள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இன்றுவரை உகந்ததாக இருக்கிறது.

annadurai speech at meeting
மக்கள் முன் உரையாற்றும் அண்ணா

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, இந்தியாவில் அதிகமானோரால் பேசப்படும் மொழியை நாம் ஏன் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என மாநிலங்களவையில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “இந்திய நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் காக்கைகள் பறந்து கொண்டிருக்க ஏன் தேசிய பறவையாக மயிலை அறிவித்துள்ளோம்” என்று அவர் கேட்ட பதில் கேள்விக்கு இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

அண்ணா
அண்ணா

இப்போதும் அதுபோல் பல கேள்விகளை நாம் முன்வைக்கலாம். ஆனால் பதில் தெரியாமல் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அதற்காக அவர்கள் திணித்துக்கொண்டே இருக்கும் கேள்விகளால் நமது உரிமைகளை இழக்க முடியாது. மீண்டும் மீண்டும் எதிர் கேள்விகளை அவர்களிடம் ஜனநாயக முறையில் எழுப்ப வேண்டும்; ஏனெனில் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்ற அரசியலையே ‘அண்ணா’ இங்கு போதித்திருக்கிறார், காரணம் காஞ்சியின் புத்தன் அவர்!

கோட் சூட்டில் கலக்கும் அண்ணா
கோட் சூட்டில் கலக்கும் அண்ணா

அதேபோல், அண்ணாவுக்கு ‘பிரிவினைவாதி’ பட்டத்தை சூட்டி மகிழ்ந்த கூட்டத்திற்கு அவர் கொடுத்த சவுக்கடியும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, “என்னுடைய கொள்கைகளையும், லட்சியங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் நான் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என நம்புகிறேன்” என்ற அவரது இந்த பதில் மூலம் அவர் ஒரு பிரிவினைவாதி இல்லை என்பது தெளிவாகிறது.

அண்ணா, பேராசிரியர் அன்பழகன்
பேராசிரியர் அன்பழகனுடன் அண்ணா

இப்படி பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் தமிழ் நிலத்தின் சுயமரியாதையை, பெரியார் கற்பித்த பகுத்தறிவை பேணி பாதுகாத்து, தன் வாழ்நாளெல்லாம் ‘கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!’ என்ற தாரக மந்திரத்தின் வழி நடந்து, தனது தம்பிகளையும் வழி நடத்தியவர் அண்ணா. அவர் மறைந்தபோது, அவரது தம்பி கருணாநிதி எழுதிய இரங்கற்பாவில், அண்ணாவின் பிறப்பை, தனக்கே உரிய கவிதை நடையில் இப்படி வடித்திருப்பார்.

கலைஞரும் அண்ணாவும்!
கலைஞரும் அண்ணாவும்!

‘அருமை மகனே வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள். என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.

தங்கம் எடுக்கவா என்றான், தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க என்றாள்!
இன்றென்ன ஆயிற் றென்றான்? குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்!
அழுத கண்ணைத் துடைத்தவாறு அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?

தொழுத மகன் உச்சி மோந்து - ஆல விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும் உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள். பிறந்திட்டான் நம் அண்ணனாக... அறிவு மன்னனாக!’
என அண்ணாவின் பிறப்பை வர்ணித்திருப்பார் கலைஞர். ஏனெனில், அவரை வார்ப்பித்தவர் அண்ணா.

அண்ணா
அண்ணா

இத்தனை சிறப்புகளுக்கும் உரியவராய் தன்னை உயர்த்திக்கொண்ட அண்ணாவின் வாழ்க்கை தமிழர் அனைவருக்குமான பெரும் பாடம். உருவ அளவில் நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டாலும் இன்றளவும் அவர் காட்டிய வழியில்தான் தமிழ்நாட்டு அரசியல் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படி தமிழர்களின் உணர்வோடும், எழுச்சியோடும் இரண்டறக் கலந்துவிட்ட தமிழ்ப் பெருநிலத்தின் பேராசான் பேரறிஞர் அண்ணாவை என்றும் மறவோம்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.