ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு - metro rail passengers count

சென்னை: கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மெட்ரோ ரயிலில் 32 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்
author img

By

Published : Jan 2, 2021, 2:25 PM IST

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 12 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட போது வெறும் 3 லட்சத்து 60 ஆயிரம் மக்களே பயன்படுத்திய நிலையில் தற்போது மக்கள் பயன்பாடு படிப்படியாக அதிகரித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னர் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை மொத்தம் 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் எண்ணிக்கை விவரம்

கடந்த செப்.7ஆம் தேதி முதல் செப். 30 வரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பயணிகள்

கடந்த அக்.1ஆம் தேதி முதல் அக்.31வரை 7 லட்சத்து 03 ஆயிரத்து 223 பயணிகள்

கடந்த நவ.1ஆம் தேதி முதல் நவ.30 வரை 8 லட்சத்து 58 ஆயிரத்து 546 பயணிகள்

கடந்த டிச.1ஆம் தேதி முதல் டிச.31 வரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 484 பயணிகள்

கடந்த டிச.21 அன்று மட்டும் 47 ஆயிரத்து 214 பயணிகள்

க்யூஆர் குறியீடு டிக்கெட் விவரம்

சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி இதுவரை மொத்தம் 83 ஆயிரத்து 813 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 18 லட்சத்து 49 ஆயிரத்து 944 பயணிகள் பயணம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29 ஆயிரத்து 583 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 6 லட்சத்து 58 ஆயிரத்து 213 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழி பயன்பாடு ஆகியவற்றுக்கு 20விழுக்காடு தள்ளுபடி அளித்து வருகிறது.

முன்னதாக செயல்பாட்டிற்கு வந்த மெட்ரோ ரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 10விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்கள் மற்றும் அவற்றை இணைக்கும் சுரங்கப்பாதைகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் போன்ற அனைத்து வசதிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'சென்னையின் இந்தப் பகுதியில் மட்டும் 30 வருடமா குற்றமே நடக்கல’: பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.