கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது முதல் இதுவரை 65.50 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் 12 லட்சத்து 30 ஆயிரம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி மாதம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 695 பயணிகளும், பிப்ரவரி மாதம் 20 லட்சத்து 54 ஆயிரத்து 653 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு