ETV Bharat / state

Chennai Metro: சென்னை மெட்ரோவில் இவ்வளவு பயணிகள் பயணமா? - traveling in metro trains

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதங்களை விட ஜூலை மாதத்தில் பயணிகள் அதிக அளவில் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 1, 2023, 9:30 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம், சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பச்சை மற்றும் நீல என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மற்றும் ஒரு வழித்தடமும் உள்ளது.

இந்த மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சென்னை நகரில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளாக, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 118.9 கி.மீ. தொலைவுக்கு மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் 66 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். ஒவ்வொறு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்ட இருக்கிறது.

கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதம் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 8.46 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஆகஸ்., 01) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், "ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28.07.2023 அன்று 3,08,495 பயணிகள் மெட்ரோ ரயில்களில்
பயணம் செய்துள்ளனர்.

2023, ஜூலை மாதத்தில் மட்டும் க்யு.ஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29,10,875 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 48,85,843 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 2,97,348 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,382 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது பயண அட்டை) பயன்படுத்தி 1,54,244 பயணிகள் என மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் +91 83000 86000 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் மின்னணு கணினிகளின் எதிர்காலம் - சென்னை ஐ.ஐ.டியில் 6ஆம் தேதி கருத்தரங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.