ETV Bharat / state

ஸ்டாலினின் டெல்லி பயணம்: பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை இணைக்கும் அச்சாணியாக செயல்படுவாரா?

அண்மையில் 3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இது பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓர் அணியில் சேர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் அச்சாணியாக ஸ்டாலின் செயல்படுவாரா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்...

cm mk stalin inaugurate dmk new office in delhi டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் cm-stalin-will-act-as-a-pillar-to-unite-opposition-partiesஸ்டாலினின் டெல்லி பயணம்: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் அச்சாணியாக செயல்படுவாரா?
cm mk stalin inaugurate dmk new office in delhi டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் cm-stalin-will-act-as-a-pillar-to-unite-opposition-parties ஸ்டாலினின் டெல்லி பயணம்: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் அச்சாணியாக செயல்படுவாரா?
author img

By

Published : Apr 4, 2022, 12:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ஸ்டாலினின் அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைந்தது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் பயணமாக (மார்ச்.30) இரவு டெல்லி சென்றார்.

அடுத்த பயணம் புதுடெல்லியை நோக்கி?: இம்முறை, டெல்லி பயணத்திற்கு முன்பாக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதினர். அதில், " ஒன்றிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல்வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல. இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகை. அப்படிப்பட்ட ஒரு திராவிட மாளிகையாக டெல்லிப்பட்டணத்தில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் எழுந்து நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  உடன் ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது. உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலினின் டெல்லி பயணம்
ஸ்டாலினின் டெல்லி பயணம்

எதிர்க்கட்சிகளை இணைக்கும் ஸ்டாலின்: இதனிடையே, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்க சென்ற அவர், பிரதமர் மோடி, சோனியாகாந்தி உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். பிரதமர் மோடியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். மேலும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் ஸ்டாலின்

டெல்லியில் திமுகவின் புதிய அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை கடந்த (ஏப்ரல்.2) சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த மூன்று நாட்களில் ஸ்டாலின் அரசியல் கட்சி பிரமுகர்களைச் சந்தித்ததைக் கவனிக்கும் போது, ஸ்டாலின் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் அச்சாணியாகச் செயல்படத் தொடங்கிவிட்டாரா என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

சோனியா முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை: ஸ்டாலின் தனது மூன்று நாள் பயணத்தின் போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

சுயமரியாதை - சமத்துவம் - மாநில உரிமைகளுக்கான தெற்கின் குரல் டெல்லியில் ஒலிக்க
மாநில உரிமைகளுக்கான தெற்கின் குரல் டெல்லியில்

அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவின் போது, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் அமர் பட்னா, தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடு மற்றும் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தெற்கின் குரல், டெல்லியில் உரத்து ஒலிக்க

காங்கிரஸ் இல்லாத அணி: கடந்த காலங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் மற்றும் அக்கட்சியின் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி-காங்கிரஸ் கட்சி இல்லாத அணி ஒன்றினை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று சேர்த்து மூன்றாவது அணியை உருவாக்க பெரும் முயற்சியை இந்த இரு அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்தனர்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் ஸ்டாலின்

பாஜவுக்கு சாதகமாக அமையும்: அப்போது, மம்தா பானர்ஜி தேசிய அரசியலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. எனினும் இவர்களது முயற்சிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றே சொல்லலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்களது முயற்சிக்கு எதிர்ப்பலை இருந்தது என்று சொல்லலாம்.

ஸ்டாலினின் டெல்லி பயணம்
ஸ்டாலினின் டெல்லி பயணம்

உதாரணமாக, பாஜகவை போல இந்துத்துவா சிந்தனை உள்ள கட்சியான சிவ சேனா "காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் மம்தாவின் முயற்சி பாஜவுக்கு சாதகமாக அமையும்," என விமர்சித்தது. இதே போல டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவை எதிர்க்கவில்லையெனில் அது பாஜவுக்கு அரசியல் சாதகமாக அமையும்," என்றார்.

டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டை

தேசிய அரசியலை நோக்கி நகரும் ஸ்டாலின்: ஆனால் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் தேசிய அரசியலை நோக்கி நகரும் இந்த நேரத்தில் எதிர்ப்பலை இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் மோடியின் குஜராத் மாதிரி வளர்ச்சி என்ற வியூகத்திற்கு எதிராக ஸ்டாலின் திராவிட மாடல் என்ற அரசியல் வியூகத்தை வளர்த்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி வலது சாரி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்து தேசியவாதத்தின் வளர்ச்சி மாதிரியிலிருந்து வேறுபட்ட அரசியல் பார்வை கொண்ட வலுவான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பிறகுதான் 'மாநில சுயாட்சி' என்பது அக்கட்சியின் மையக்கருவாக இருந்து வந்தது. இதனை ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு மாநில சுயாட்சி என்பதை திமுகவின் உயிர்நாடியாக ஆக்கினார். இந்தச் செயல்பாட்டில், பாஜகவுக்கு எதிரான தேசிய எதிர்ப்பில் தன்னை உறுதியாக நிறுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக.வுக்கு வலுவான திராவிட எதிர்ப்பாளராகவும் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல
அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல

அன்று கருணாநிதியின் வைரவிழா இன்று ஸ்டாலினின் சுயசரிதை: சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸ்டாலினின் சுயசரிதையை நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு முன்னுரையாகப் பார்க்கப்பட்டது. இதே போல கடந்த ஜூன், 2017-ல் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த கருணாநிதியின் வைரவிழா நிகழ்ச்சியிலும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

அதில், ராகுல் காந்தி, பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் அப்போது கலந்து கொண்டனர்.

தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் : ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகி கூறுகையில், "தேசிய அளவில் திமுக தலைவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது, என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் திமுக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து வெற்றி பெரும் என்பது உறுதியாகிவிட்டது" என கூறினார்.

ஒன்றிணைப்பது சற்று சவாலாகவே இருக்கும்: இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "தமிழ்நாடு அரசியல் மற்ற மாநிலங்களின் அரசியலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைப்பது சற்று சவாலாகவே இருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாரிசு அரசியலை எதிர்த்தவர்..! வாரிசை வைத்து அரசியல்..!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.