ETV Bharat / state

"சாதாரண சட்டத்தை கூட நிறைவேற்ற உரிமை இல்லாதவரா ஆளுநர்.?" - முதலமைச்சர் ஸ்டாலின்! - தமிழ்நாடு

ஒரு சாதாரண சட்டத்தைக் கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்துக்குத்தான் ஆர்என் ரவி ஆளுநராக இருக்கிறாரா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Mar 11, 2023, 9:31 AM IST

சென்னை: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பவள விழா, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தான் வேறு என்று கலைஞர் நினைத்தது இல்லை. கலைஞர் வழித்தடத்தில் தான் நமது திராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசு அமைந்ததும் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது.

தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டு 4 வக்பு சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்களை பழுது பார்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 20 மாதங்களில் செய்து தரப்பட்டிருக்கக்கூடிய திட்டங்கள்.

இவை அனைத்தும் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து தரப்பட்ட புதிய திட்டங்கள். இந்த மாநாட்டை ஒட்டியும் சில தீர்மானங்களை நீங்கள் எனக்கு போட்டிருக்கிறீர்கள். முதலமைச்சர் வருகிறார் என்றால் கோரிக்கை இல்லாமல் இருக்காது. அதற்கான உரிமை உங்களுக்கும் இருக்கிறது. செய்து தரக்கூடிய கடமை எனக்கும் இருக்கிறது. அதை நான் மறக்க மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கேரள மாநிலத்தில் உள்ளது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது, உள்பட பல கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்படும். நியாயமான, சாத்தியமுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று நான் உறுதியோடு இந்த மேடையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களது மிக முக்கியமான ஒரு கோரிக்கை. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது. 14 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை வாசத்தை முழு தண்டனை காலமாகக் கருதி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். நம்முடைய திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்தோம்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மிக அதிக ஆண்டுகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் குழுவினுடைய பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்குக் கூட இது குறித்து கோப்புக்களை பார்த்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். விரைவில் அவை ஆளுநருடைய ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிகையில், "சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக் கூட ஒப்புதல் தர மறுக்கிறது. நான்கு மாதங்கள் கழித்து, மாநில அரசுக்கு இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற உரிமை இல்லை என்று சொல்கிறார். இந்த ஒரு சாதாரண சட்டத்தைக் கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்துக்குத்தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா?.

நீட் விலக்குக் கேட்டு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்டநாள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இதுதான் ஆளுநர்கள் செயல்படக்கூடிய லட்சணமா? உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும்.

சிறுபான்மையினர்க்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவை தகர்ப்பார்கள். இந்தியைத் திணிப்பார்கள். மாற்று மதத்தவர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதைத் தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024 நடைபெறவிருக்கக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது. ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம், திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை விமர்சித்தால் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும் - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.