ETV Bharat / state

என் மீதான அன்புதான் அந்த பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன் - தொண்டர்களிடம் கடிதம் வாயிலாக உருகிய ஸ்டாலின்! - என் மீதான அன்புதான் அந்த பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன்

'உங்களில் ஒருவனான என் மீது அன்பு கொண்ட அனைவரும், பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை' என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

என் மீதான அன்புதான் அந்த பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன் - தொண்டர்களிடம் ஸ்டாலின் உருக்கம்...

author img

By

Published : Jun 20, 2022, 3:32 PM IST

சென்னை: திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூன்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடுவது இயற்கை.

தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (ஜூன்.20) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (ஜூன்.21) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு அரசின் செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டது.

அத்துடன், நேற்று (ஜூன்.19) வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை நமது திமு கழகப் பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் படித்தார்கள். இவை செய்திகளாக வெளியானதும், உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட உடன்பிறப்புகளும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத்தொடர்ந்திடுவேன்.

சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா, வடிகால் அமைப்புப் பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து அதிகாலையிலேயே அலுவலர்களுடன் ஆலோசித்து விவரங்களைத்தெரிந்து கொண்டேன்.

ஒரு சில இடங்களில், வடிகால் கட்டமைப்புப் பணிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டிய சூழல் இருப்பதையும், அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டு, அவற்றை விரைந்து முடிக்குமாறு பணித்துள்ளேன். இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன்.

ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. உடன்பிறப்புகளாம் உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்" என்று கட்சியின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.