சென்னை: திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பொன்னழகன்-பூவாத்தாள்.
இவர்களது மகன் அருண்குமார் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.28) தலைமை செயலகத்தில் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
![முதலமைச்சர் பாராட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13479849_2.jpg)
எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.
![முதலமைச்சர் பாராட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13479849_1.jpg)
இதையும் படிங்க: நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த முஸ்லிமல்லாத ஒரே தலைவர் பெரியார் - ரியாஸ் அகமது புகழாரம்