ETV Bharat / state

"எனக்கு கேரளாவில் ரசிகர் கூட்டம் இருப்பது போலவே ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறது"

எனக்கு கேரளாவில் ரசிகர் கூட்டம் இருப்பது போலவே ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் உரை
author img

By

Published : Jul 30, 2022, 5:36 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 30) காணொலி காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி: கேரள மக்கள் தமிழ் சினிமாவுக்கும் அதன் இசைக்கும் மிகப் பெரும் ரசிகர்கள். அதே போல ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் அங்கு இருக்கிறது. கண்ணூரில் நடந்த சிபிஎம் கட்சி மாநாட்டில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு எப்படி பார்க்கிறது ?.

பதில்: “எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர், முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும்.

அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை ஊடகங்களும் கூட எழுதியது.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது, என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதரானமாக உங்களுடைய முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளையே நான் கையில் எடுத்தேன். குறிப்பாக, கரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மாநிலத்தின் உடைய முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியே அந்தப் பணியை நிறைவேற்றினேன். இதுதான் எனக்கு பெருமையே” என்றார்.

கேள்வி: தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சியும் மற்றும் திமுகவும் கூட்டணி கட்சிகள். இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது?

முதலமைச்சர் பதில்: “எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாவே இருக்கிறோம். திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள்.

தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இந்த பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது. இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நாங்களும் சில நடவடிக்கைகளில் அவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம்.

அதையும் தாண்டி அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் தொடரும் என்றார்.

கேள்வி: உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறியபோது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பின்னர் பிரதமர் மோடி பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை ஏற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், ஒரு மொழி என்று பேசுவது மாநில மொழிகளுக்கு அச்சுறுத்தலானதா?

பதில்: “ஆமாம்! இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய நாடாகும். ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும். காலப்போக்கில் அழிந்துவிடும். அதில் மாற்று கருத்து இல்லை. அதுதான் என்னுடைய பதில்” என்றார்.

கேள்வி: கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகி வருகிறது. பத்திரிக்கையாளர்கள் கூட கைது செய்யப்படுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கிறது. போராடிப் பெற்ற சுதந்திரத்தை இழக்கிறோமா?

பதில்: “இவை அனைத்தும் ஒரு எதேச்சதிகாரப் போக்குகள்! போராடி பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகள் அனைத்தையும் பறிப்பது என்பது மிகமிக தவறானது. இந்திய விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம் என்பது தான் என்னுடைய கருத்து” என்றார்.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.