ETV Bharat / state

சொந்த கட்சியினருக்கு 'நோ' சொன்ன ஸ்டாலின்! - முக ஸ்டாலின்

கரோனா நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய ஐந்து மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் தன்னை சந்திக்க வர வேண்டாம் என வேண்டுகொள் விடுத்துள்ளார்

MK STALIN, முக ஸ்டாலின்
CM M.K. Stalin's request - No flags and banners to welcome me
author img

By

Published : May 19, 2021, 11:05 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மே.19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை நாளையும் (மே.20) நாளை மறுநாளும் (மே.21) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கட்சி நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.

எனவே, கட்சியினர் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இந்தப் பயணத்தின்போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் எனக்கு வரவேற்பு கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கட்சிக் கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும், பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால், என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை கட்சியினர் தவறாது கடைப்பிடித்திட வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’தாராளமாய் தாருங்கள்...’ தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.