ETV Bharat / state

கால்நடைகளுக்கான தடுப்பூசி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் - கோமாரி நோய்

கால்நடைகளைப் பாதிக்கும் கோமாரி நோயைத் தடுக்க 90 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்
மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்
author img

By

Published : Dec 17, 2022, 10:58 PM IST

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்-National Animal Disease Control Programme-NADCP) கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய தடுப்பூசி ஒன்றிய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வேண்டும்” எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.